• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனாவை விரட்ட விழிப்புணர்வு நடனம் !

May 23, 2020 தண்டோரா குழு

கோவையில் கோரனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் கோவை மாநகரத்தில் இனி கொரோனா நம்மிடம் வருவதற்கு முன் எப்படி அடித்து விரட்ட வேண்டும் என்பதை கிரிக்கெட் மட்டையால் அடித்து வீழ்த்தி குழந்தைகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது உலகெங்கும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த வகையில் தமிழகத்தில் முக்கிய நகரமான சென்னை பகுதியில் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை ஒழிப்பதற்கான பணிகளை அரசு எடுத்து வருகிறது.இதன் ஒருபகுதியாக தென் இந்தியாவின் தொழில் நகரமான கோவையில் முழுமையாக கொரனா இல்லாத மாவட்டமாக மாற்றி அங்கு இந்த நோய் தொற்று வரக்கூடாது என்பதற்காக கோவை மாநகர காவல் துறை சார்பில் சாலையோரங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக கோவை பீளமேடு காவல்துறை சார்பாக சிறு குழந்தைகளின் நடனங்களின் மூலம் சாலையில் செல்லும் மக்களுக்கு முக கவசம்,கை கழுவுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டயாத்தை பின்பற்ற வேண்டும் என்பதையும், கொரனா நம்முல் வருவதற்கு முன் எப்படி அடித்து விரட்ட வேண்டும் என்பதை கிரிக்கெட் மட்டையால் அடித்து வீழ்த்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க