July 19, 2020
தண்டோரா குழு
கோவை இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
கோவை இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த 10 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இவரது உடல் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தகனம் செய்ய ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல், கோவை டவுன்ஹால் அருகே உள்ள வின்செண்ட் சாலையை சேர்ந்த 65 வயதான பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதை தொடர்ந்து இவரது உடல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திடம் நல்லடக்கம் செய்ய ஓப்படைக்கப்பட்டது.இவரது உடலை அவ்வமைப்பினர் சுகாதாரத்துறை விதிகளின்படி நல்லடக்கம் செய்தனர்.