• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 32 பேர் டிஸ்சார்ஜ்!

April 21, 2020 தண்டோரா குழு

கொரோனோ தொற்றில் இருந்து குணமடைந்த கோவை,திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 32 பேர் கோவையில் ” டிஸ்சார்ஜ் “.கோவை கலெக்டர் ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா பழக்கூடை வழங்கியும்,கைகளை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

கோவை மாவட்டத்தில் 133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும், இதுவரை 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில், 3 குழந்தைகள் உட்பட 32 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 29 பேர் கோவை மற்றும் 3 பேர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா ,ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களை பழக்கூடைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர். மேலும்,குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி,மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா,ஈ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உற்சாகமூட்டும் வகையில் கைகளை தட்டி வழியனுப்பி வைத்தனர்.

பின்னர்,செய்தியாளர்களிடம் பேசிய
மாவட்ட ஆட்சியர் ராசாமணி,

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கொரோனா தொற்றினால் சிகிச்சை பெற்றவர்களின் முழு ஒத்துழைப்போடு மட்டுமே சாத்தியமானது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

சந்தேகப்படும் இடங்களில் அறிகுறியுடன் யாராவது இருக்கிறார்களா என மக்கள் நல் வாழ்வு துறை, வருவாய்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் வீட்டுக்கு சென்றாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரையை தவறாது பின்பற்ற வேண்டும். கோவை மாவட்டத்திற்கு, முதல்கட்டமாக 2000 ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் மற்றும் மேலும் 1200 கருவிகள் வரப்பெற்றுள்ளது.அதில், 1000 கருவிகள் கொண்டு சோதனை செய்யப்பட்டதில் 8 பேருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. ஆனாலும், இது நோய் அறிகுறி இருக்கிறதா என நேரடியாக பார்ப்பதற்கான கருவி அல்ல. ஆர்.டி.பி.சி.ஆர், என்ற பரிசோதனையில் மட்டுமே தொற்று இருக்கிறதா இல்லையா என்று முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.100 சதவிகித கொரோனா வைரஸ் தொற்று இல்லா மாவட்டமாக இருப்பதற்கு மக்கள் முழுமையாக அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க