June 27, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று ஒரேநாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 428 ஆக உயர்ந்துள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்படும் எம்.ஜி.,ஆர் மார்க்கெட்டில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 46 வயது நபருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல்,பூ மார்க்கெட்டை சேர்ந்த 36 வயது பெண், கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும், 22 வயது பெண் என இருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்,குனியமுத்தூரில் வசிக்கும், புதிய தமிழக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின்மனைவி 65, கோவை, சூலுாரை சேர்ந்த 16 வயது பெண், கே.கே.புதூரை சேர்ந்த 26 வயது பெண், காமராஜர் வீதி கே.கே.புதூரை சேர்ந்த 23,45,48 வயது ஆண்கள், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 27 வயது ஆண், செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த 45 வயது பெண், இடையர்பாளையம், காவேரி நகரை சேர்ந்த 52 வயது ஆண், சரவணம்பட்டி, பெரியார் வீதியை சேர்ந்த 50 வயது ஆண், துடியலுார் மதுரை கோணார் மெஸ்சில் பணி புரியும், 22,25,21,29 வயது ஆண்கள், துடியலுார், விஸ்வநாதபுரத்தை சேர்ந்த 28, 29 வயது ஆண், பெண். இருகூர், காமாட்சிபுரத்தை சேர்ந்த 31 வயது பெண், பி.கே.புதூரை சேர்ந்த 37 வயது ஆண், கோட்டூரை சேர்ந்த 27 வயது ஆண், 65 வயது பெண், 10 வயது சிறுவன் மற்றும் டவுன்ஹால் உப்பர் வீதியை சேர்ந்த 32 வயது ஆண், என மொத்தம் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோர்
கோவை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், கோவையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 393ல் இருந்து 428 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவில் இருந்து இன்று 43 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்சமயம் 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.