June 26, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளது.
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று கோவை நேருநகர், கணபதியை சேர்ந்த 40 மற்றும் 48 வயது ஆண்கள், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 56 வயது ஆண், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தை, ஒண்டிப்புதுாரை சேர்ந்த 34, 54 வயது ஆண் பெண், விஸ்வாசபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது பெண், சுந்தரபுரத்தை சேர்ந்த 31 வயது பெண்,ரத்தினபுரியை சேர்ந்த 47 வயது ஆண், வீரபாண்டி பிரிவை சேர்ந்த 33 வயது பெண், காரமடையை சேர்ந்த 63 வயது மூதாட்டி, புதுப்பாளையத்தை சேர்ந்த 45 வயது ஆண், ஆர்.எஸ்.புரத்தில் தனியார் குடியிருப்பில் வசிக்கும், 30, 53 வயது பெண்கள் மற்றும் 55 வயது ஆணுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கே.கே.புதுாரை சேர்ந்த 48, 20 வயது பெண்கள் 10 வயது சிறுவன் மற்றும் 24 வயது ஆண்,கோவில்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது பெண், இருகூர் பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், தெலுங்கு வீதியை சேர்ந்த 55, 47,60 வயது பெண்கள், 68, 39 வயது ஆண்கள், காந்திபுரம் பட்டேல் ரோட்டை சேர்ந்த 49 வயது ஆண், அசோக புரத்தை சேர்ந்த 51 வயது ஆண், காமராஜர் வீதி, கே.கே.புதுாரை சேர்ந்த 21, 34 வயது ஆண்கள், 19, 40 வயது பெண்கள் மற்றும் சண்முக ராஜபுரத்தை சேர்ந்த 49 வயது ஆண் என ஒரே நாளில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோர்இ .எஸ்.ஐ., மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 347ல் இருந்து 393 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் இன்று பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.