• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஐந்து பேர் பூரண நலம்

April 6, 2020 தண்டோரா குழு

26 வயது ஸ்பெயின் ரிட்டன் மற்றும் பெண் மருத்துவர்,பத்துமாத குழந்தை உள்பட 5 பேர் கொரோனா நோய்தொற்றில் குணமடைந்த நிலையில் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கோவையில் சிங்கநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் சிகிச்சைக்கு பெற்றுவந்த ஐந்து பேரும் குணமடைந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கோவையில் கொரோனா பாதிப்பில் முதல் நபராக அனுமதிக்கப்பட்ட 26 வயது மாணவி ( ஸ்பெயின் ரிட்டன்), பெண் மருத்துவர், 10 மாத குழந்தை, வீட்டு பணிப்பெண் மற்றும் திருப்பூரை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஆகிய 5 பேரும் வீட்டுக்கு பாதுகாப்பாக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இவர்களுக்கு கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு பல்வேறு வகையான பரிசோதனையில் சோதித்துப் பார்த்தபின்பு எந்தவிதமான பாசிட்டிவ் அறிகுறிகள் வராத காரணத்தால் மருத்துவர்களும் மாவட்ட நிர்வாகமும் பாதுகாப்பாக அவர்கள் தம் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வருகின்ற 28 நாள் அவர்கள் வீட்டிற்குள்ளேயே தனிமைபடுத்தி இருக்க வேண்டும் எனவும் தொடர்ந்து உடல்நிலையில் ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக மருத்துவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கோவையில் 59 பேர் கொரோனா நொய்தொற்று உடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 300 பேருக்கு கோவையில் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டதில் 228 பேருக்கு தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. அதில் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்த உள்ளனர். உள்ளது.

மாவட்ட ஆட்சியர் இராசமணி அளித்த பேட்டியில்,

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் இருப்பதற்கே அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க இஎஸ்ஐ மருத்துவமனை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் கொரோனா சிகிச்சைக்கான உபகரணங்கள் நம்மிடம் உள்ளது. மேலும் பொதுமக்கள் 144 தடை உத்தரவை மதித்து நடந்து கொள்ள வேண்டும், அதை மீறுபவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கோவையில் 13 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யும் அளவிற்கு கட்டிடங்களும் வளாகங்களும் தயார் நிலையில் உள்ளது. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் மட்டும் 140 வென்டிலேட்டர் தயார் நிலையிலும் கூடுதலாக வெண்டிலேட்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இன்னும் இரண்டு நாட்களில் நமக்கு வந்து சேரும் என முதல்வர் நமக்கு தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற பத்தாம் தேதிக்கு மேல் முதல்வர் அறிவித்த (Rapit டெஸ்ட்) பரிசோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மேலும் கொரோனா அறிகுறிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளான பகுதிகள் அனைத்தும் சுத்தி இரண்டு கிலோ மீட்டருக்கு கிருமி நாசினி மற்றும் மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு படியாக அன்னூர், ஆனைமலை மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. மாநகர் பகுதிகளில் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

மேலும் படிக்க