• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை – மின் கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் தத்தளித்த கிராமங்கள்

May 29, 2020 தண்டோரா குழு

கடந்த பல நாட்களாகவே கத்திரி வெயின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வந்தது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுட்டெரித்த வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியும் கொளுத்தியதால் மக்கள் அத்தியாவசியப்
பொருட்களை பெறுவதற்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

இந்த நிலையில் நேற்றுடன் கத்திரி வெயில் நிறைவு பெற்றதை ஒட்டி இத்தனை நாள் வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம்,அன்னூர்,சூலூர்,சுல்தான்பேட்டை,கருமத்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்துள்ள ராயர்பாளையம் பகுதியில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்து விழுந்து 5 மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.மேலும்,கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன.பல இடங்களில் மின் கம்பங்களும் உடைந்து விழுந்தது.இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் இருளில் தவித்தன.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பொது மக்கள் பலமுறை முறையிட்டும் இதுவரை மின் இணைப்பு வரவில்லை. அதிகாரிகளும் உரிய முறையில் பதிலளிப்பதில்லை எனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொழிற்சாலைகள்,வீடுகள் அதிகம் உள்ள கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளுக்கு ஒரே ஒரு லைன்மேன் தான் பணியில் உள்ளார். அதனால் தான் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு சாதாரண மழைக்கே நம் மின்வாரியத்தினரின் சீரமைப்பு பணியில் தொய்வு என்றால் வெள்ளம்,புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்களின் நிலை என்னவாகும் என பொதுமக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்களை நியமித்து மின்வாரியத்தின் குறைகளை களைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க