• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு

December 16, 2021 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி அருகே முட்புதரில் அழுகிய நிலையில் கை, கால்கள், வாய் கட்டப்பட்ட 15 வயது சிறுமி சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, முட்புதரில் சாக்கு ஒன்றிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதை திறந்து பார்த்தபோது, அழுகிய நிலையில் பெண் சடலம் இருப்பதை அறிந்து சரவணம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேதத்தை சோதனை செய்தனர். அப்போது, சடலமாக கண்டெடுக்கப்பட்டது கோவை சரவணம்பட்டி பகுதியில் காணாமல் போன 10 ஆம் வகுப்பு பயின்று வந்த 15 வயது சிறுமி என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

கடந்த 11 ஆம் தேதி கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், தனது 15 வயது மகளை காணவில்லை என தாய் புகார் அளித்துள்ளார். வீட்டிலிருந்து அருகாமையிலேயே கிடைக்கப்பெற்ற சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சிறுமியை கொலை செய்தது யார் ,எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க