• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கையில் தாமரையை மலர வைத்த பாஜக மகளிரணி

April 7, 2019

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணி, அங்கிருந்த பெண்களின் கைகளில் தாமரையை மெகந்தியாக வரைந்து வாக்கு சேகரித்தனர்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 18-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக சார்பில் கோவை தொகுதியில்  சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

அவருக்காக பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் திரண்ட அக்கட்சி மகளிர் அணியினர், அங்கிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளின் கைகளில் தாமரையை மெகந்தியாக வரைந்தனர்.

இதுமட்டுமின்றி, பாஜகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கியும் அவர்கள் வாக்கு சேகரித்தனர்.

மேலும் படிக்க