July 28, 2020
தண்டோரா குழு
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் வேல் வரைந்து பாஜகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்தும் இந்து கடவுள் முருகன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், இதனைக் கண்டித்து இந்து அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை இடையர்பாளையம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் ப்ரீத்தி லட்சுமி இல்லம் முன்பு, அவ்வமைப்பினர் வேல் பூக்கோலம் உட்பட 50 கோலங்கள் இட்டும், பெண்கள் தங்களது கைகளில் வேலை பல வண்ணங்களால் வரைந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் முருகன் பாடல்கள் மற்றும் பஜனை பாடல்கள் பாடியும், கறுப்பர் கூட்டத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.