• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கே.ஜி.பவுண்டேஷன் சார்பில் டயனமிக் இந்தியன் ஆப் மில்லினியம் விருது

September 16, 2019 தண்டோரா குழு

கோவையில் கே.ஜி.பவுண்டேஷன் சார்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இராணுவம் ,மருத்துவம்,ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு டயனமிக் இந்தியன் ஆப் மில்லினியம் என்ற விருது வழங்கப்பட்டது.

கோவை கே.ஜி.பவுண்டேஷன் சார்பாக மருத்துவ துறை, நாட்டின் பாதுகாப்பு துறையில் பணியாற்றுபவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த ஒன்பது பேரை தேர்வு செய்து டயனமிக் இந்தியன் ஆப் தி மில்லினியம் எனும் விருது வருடந்தோறும் வழங்கப்பட்டுகிறது.

இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாகத்தில் நடைபெற்றது.கே.ஜி.பவுண்டேஷன் தலைவர் மருத்துவர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில் , வராஹி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ வராஹி குருஜி மற்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் , ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.இதில் டயனமிக் இந்தியன் ஆப் தீ மில்லினியம் விருதை , Dr . பால் தினகரன் , இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பேராசிரியர் ராஜகோபால் ,டாக்டர் மிருதுபாஷினி Dr . மாதவன் அழகர்சாமி , Dr . S , கணபதி ரமணன் , Dr . G , மனோஜ் மத்வானி , Dr . B . துர்கா பிரசாத் ரெட்டி , . Dr . அல்போன்ஸ் மரியதாஸ் ,ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 81 மருத்துவர்களுக்கு ” டாக்டர் ஆப் எக்ஸ்லென்ஸ் ” விருதினையும் மேலும் நாட்டின் பாதுகாப்பு துறையை சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை , விரைவு அதிரடிப்படை , எல்லை பாதுகாப்பு படை , கப்பற்படை , இராணுவம் , விமானப்படை ஆகியவற்றில் பணி செய்வோர்க்கு ” இந்தியாவின் நாட்டுப்பற்றுமிக்க ஹீரோக்கள் விருதுகளையும் டாக்டர் பக்தவத்சலம் வழங்கி கவுரவித்தார்.விழாவில் கே.ஜி.ஐஸ்.எல்.தலைவர் அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க