• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கேரள கஞ்சா வியாபாரி கைது

January 19, 2021 தண்டோரா குழு

கேரளாவிலிருந்து கோவை வந்து தொடர்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கேரள கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு, கூட பட்டி ரோடு, தீபக் நிவாஸ் இல்லம், பகுதி கோவிந்தராஜ் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 31), இவர் கேரளாவில் இருந்து கோவை வந்து ரூம் எடுத்து தங்கியுள்ளார். இங்கு கிடைக்கக்கூடிய வேலையை செய்து கொண்டு வாரம் ஒருமுறை கேரளாவிலிருந்து கஞ்சா கொண்டு வந்து அதை பொட்டலங்களாக போட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.

நேற்று மாலை தடாகம் போலீசாருக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தடாகம் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் மாங்கரை பாலம் அருகே சென்று ஆய்வு செய்தனர். அங்கு சதீஷ்குமார் கஞ்சா விற்பனை செய்த போது கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 1,200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க