• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கூட்டுறவு வங்கி செயலாளரை கடத்தி 50 லட்சம் பணம் பறித்த 3 பேர் கைது

January 22, 2019 தண்டோரா குழு

நகர கூட்டுறவு வங்கி செயலாளரை கடத்தி 50 லட்சம் பணம் பறித்த கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலிசார் கைது செய்தனர்.

கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கியின் செயலாளராக இருந்து வருபவர் சரவணக்குமார். இவரிடம் நகையை வைத்து பணம் வாங்குவது போல் வங்கி வந்த சில மர்ம நபர்கள் வங்கியில் அதிகளவு பணம் இருப்பதை கண்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு காரில் கடத்தி சென்றுள்ளனர். பின் அவரை தனியான இடத்தில் வைத்தி நிர்வாணமாக வீடியோ பதிவு செய்ததாகவும், அதை வேறு பெண்ணுடன் இணைத்து இணையத்திலும் சரவணகுமார் மகனுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டி அவரிடம் முதல் கட்டமாக 20 லட்சம் ரூபாய் பெற்ற மர்ம கும்பல் தொடர்ந்து அவரிடன் பல தவணையாக மொத்தம் 50 லட்சம் பணத்தை பெற்றுள்ளனர்.

வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதால் புகார் அளிக்காமல் இருந்த சரவணகுமாரை கடந்த 18 தேதி தொடர்பு கொண்டு மீண்டும் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் சரவணகுமார் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கொள்ளையர்களை பணம் வாங்க அழைப்பது போல் அழைத்து கொள்ளை கும்பலை சேர்ந்த பத்மநாபன், நாகராஜன், விஷ்னுகுமார் மூன்று பேரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், ஐயப்பனை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க