August 25, 2020
தண்டோரா குழு
சாய்பாபா காலனி பகுதிகளில் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி பகுதி ரகுபதி லே அவுட் பகுதியில் கடந்த சில தினங்களாக பத்திற்கும் மேற்பட்ட குரங்குகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நான்கைந்து குரங்குகள் அந்த பகுதியிலுள்ள நாய் ஒன்றினை கடிக்க வந்ததாக கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வனத்துறையினர் குரங்கினை பிடிப்பதற்கு ஒரு வீட்டிற்குள் கூண்டு வைத்துள்ளனர்.ஊரடங்கு காலம் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத காரணத்தினால் குரங்குகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.குரங்குகள் அடிக்கடி வந்து அங்குள்ள உணவுப் பொருட்கள் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் துணிகளை எடுத்து செல்வதுமாக இருந்தது சில நேரத்தில் அப்பகுதி மக்களை தாக்க முயன்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.