• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குதிரையில் வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

March 26, 2019 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் இன்று குதிரையில் வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோவையை அடுத்த சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த நூர் முகமது என்பவர் சுயேச்சை வேட்பாளராக கோவை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது குதிரையின் மீது அமர்ந்து ஆட்சியர் அலுவலகம் வரை வந்து நூதன முறையில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஏற்கனவே கடந்த வாரம் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக தள்ளுவண்டியில் வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதன் மூலம் இரண்டு தொகுதிகளில், போட்டியிடுவதற்கு வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார். இதுவரை பல்வேறு தேர்தலில் 30 ஆவது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க