• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை திறந்து வைத்த தமிழக முதல்வர்

December 17, 2018 தண்டோரா குழு

கோவையில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கோவையை அடுத்த உக்கடம் பகுதியில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.94.42 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 1840 வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. மேலும் திரு.வி.க. நகர் திட்டப்பகுதியில் 256 வீடுகள் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.

இந்த வீடுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். வீடுகள் அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர ஆணையாளர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க