• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு 5 ஆயிரம் கடிதம் அனுப்பும் போராட்டம்

September 3, 2021 தண்டோரா குழு

நாட்டில் சமையல் கியாஸ் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமையல் கியாஸ் விலை மேலும் 25 ரூபாய் உயர்ந்து தற்போது 900 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

அந்தவகையில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் கேஸ் விலை உயர்வை கண்டித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் மூலமாக 5ஆயிரம் கடிதங்கள் அனுப்பும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து தபால் நிலையம் வரை ஐந்தாயிரம் கடிதங்களை ஒரு தட்டில் வைத்து ஏந்தியவாறு ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர் பிரதமருக்கு தபால்களை அனுப்பினர்.

மேலும் படிக்க