• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல் நிலையத்தை கன்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு

November 6, 2020 தண்டோரா குழு

கோவை ஜிஎன் மில் அருகே, நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவல் நிலையத்தை, கன்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில் அருகே உள்ள, சுக்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், லட்சுமி, இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், நேற்றுஇரவு வழக்கம் போல், கடையை பூட்டி சென்ற நிலையில், இன்று காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்களை ஒரு வாகனத்தில் மர்ம நபர்கள் ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அவர்களின் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.இதனால், சிசிடிவி காட்சிகளை கொண்டு, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். ஆனால் காவல்துறையினர் இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி, அலட்சிய போக்கோடு செயல்பட்டதால் காவல்துறையினர் மீது ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்களான லட்சுமி, மற்றும், அவரது குடும்பத்தினர், துடியலூர், காவல்துறையினரை கன்டித்து திடீரேன சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க