January 30, 2019
தண்டோரா குழு
கோவையில் பத்து நாட்களுக்கு மேலாக காணாமல் போல சிறுவன் , சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர்கள் சில அழைத்து சென்றதாக கூறப்படும் நிலையில், மருத்துவ பரிசோதனை செய்யாமல் அலைக்கழிப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர்.
கோவையை அடுத்த நீலாம்பூர் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் சரஸ்வதி தம்பதியினருக்கு ஒரு மகள்(வயது 15) , மற்றும் ஒரு மகன்(வயது 13) உள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 16 ஆம் தேதி காணாமல் போயுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர்கள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். வீட்டின் அருகே இருந்த ராஜீவ் காந்தி என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர் குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இருவரையும் ராஜீவ் காந்தி அழைத்து செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி ராஜீவ் காந்தியின் உறவினர்கள் நான்கு பேர், சிறுவன், சிறுமியை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர். பெற்றோர்களின் சம்மதத்துடனேயே கோவில் திருவிழாவிற்கு அழைத்து சென்றதாக, அவர்கள் கூறி உள்ளனர். இதற்கிடையில், பத்து நாட்களுக்கு மேலாக காணாமல் போயுள்ளதால், தங்களது குழந்தையை மருத்துவ பரிசோதனை செய்தால் மட்டுமே தாங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வோம் என அவரது பெற்றோர்கள் கூறிய நிலையில் தற்போது இருவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இதுவரை மருத்துவ பரிசோதனை செய்யாமல் காவல் துறையினர் அலைக்கழிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். தற்போது ராஜீவ் காந்தி தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் கேட்டபோது,
சிறுவர்கள் இருவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும், மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படமாட்டது எனவும் கூறினார்.