August 30, 2020
தண்டோரா குழு
கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தெற்று உறுதியானதால் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.
கோவை காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் உள்ள இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.கடந்த ஒரு வாரத்தில் கோவையில் 25 போலீசாருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் கூறுகையில்,
பாதிக்கப்பட்ட போலீசார் அனைவரும் நலமுடன் உள்ளனர். அனைத்து போலீசாரும் தகுந்த பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.