• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வு

July 26, 2021 தண்டோரா குழு

கோவையில் காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் காவலருக்கான உடற்தகுதித் தேர்வு இன்று துவங்கியது. காவல் தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள 11,813 இரண்டாம் நிலை காவலர் காண எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதை ஒட்டி எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல்தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று துவங்கியது.இதேபோல் கோவை அவினாசி ரோட்டில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் காவலருக்கான உடற்தகுதி தேர்வு இன்று காலை ஆறு மணிக்கு துவங்கியது இதில் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதலில் 1500 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது.

இதில் தேர்ச்சி பெற்றோருக்கு கயிறு ஏறுதல் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதையொட்டி கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.

மேலும் படிக்க