April 30, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்குச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் அனைத்து கால்நடை மருந்தகங்களும் இயங்குகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே சென்று வருகின்றனர்.இந்நிலையில்,ஊரடங்கு காலத்தில் கால்நடை மருத்துவர்கள் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை செயற்கை முறை கருவூட்டல் சேவைகளைச் செய்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சி சுந்தராபுரம் கால்நடை மருந்தகம் உதவி இயக்குநர் கோவை மரு.இளங்கோ மற்றும் உதவி இயக்குநர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மரு.கீதா ஆகியோரால் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது, கால்நடை உதவி மருத்துவர் மரு.ரத்தீஷ் கண்ணன் உடனிருந்தார்.