• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காய்ச்சல் வந்ததால் கொரோனா பயத்தில் இளைஞர் தற்கொலை

July 1, 2020 தண்டோரா குழு

கோவையில் காய்ச்சல் வந்ததால் கொரோனா பயத்தில் இளைஞர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் இருகூர் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்.தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக இவருக்கு காய்ச்சல்
இருந்துள்ளது.இதனால் அச்சத்தில் இருந்த அவர் தனக்கு கொரோனா காய்ச்சல் வந்து விட்டதாகவும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் நண்பர்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த கண்ணன் மதியம் வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் கண்ணனைத் தேடி உள்ளனர். பின்னர் இருகூர் ரயில் நிலையம் பகுதியில் சரக்கு ரயில் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்த்தபோது ரயில் மோதி இறந்தது உள்ளது கண்ணன் தான் என தெரியவந்தது.

இதையடுத்து,இது குறித்து போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கோவை நோக்கி வந்த சரக்கு ரயில் முன்பு கண்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.கொரோனா அச்சம் காரணமாக இளைஞர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க