• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதல் மனைவியை பிரித்ததால் மணமகன் தற்கொலை

September 9, 2020 தண்டோரா குழு

கோவையில் காதல் மனைவியை பிரித்த காரணமாக, திருமனம் ஆன முன்றாவது நாளில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ், இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார் இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த ஒன்றாம் தேதி நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளில், மணமகளின் வீட்டார் காவல் நிலையத்தில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போத்தனூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பதாக அழைத்துள்ளனர்.

மேலும் மணமகன் மற்றும் மணமகள் தனித்தனியாக விசாரித்த காவல்துறையினர் மணமகளை அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர் திருமணம் முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் தனது மனைவியை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைப்பதற்கு காவல்துறையினர் எடுக்கும் நடவடிக்கை குறித்து மணமகன் மனவேதனை அடைந்துள்ளார்.

இந்த நிலையில் தனது மனைவியை அவர்களது பெற்றோர் அழைத்து சென்றதை அறிந்த மணமகன் வீட்டிற்கு வந்து யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் திருமணமான மூன்றாவது நாளில் மனைவியை பிரிந்த நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் மண மகனின் சாவுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மணமகனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதற்கு ஒரு சரியான நடவடிக்கையினை எடுத்து, இறந்த மணமகனின் மரணத்திறக்கு சரியான தீர்வு காண வேண்டுமென மணமகன் குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க