• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

February 1, 2019 தண்டோரா குழு

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்தவர் அமல் பி.குமார் (19) அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே வகுப்பில் படிக்கும் கொல்லம் அடூர் பகுதியை சேர்ந்த மாணவி சூர்யா. எஸ்.நாயர் (18) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை 5 மணியளவில் கொல்லத்தில் டிக்கெட் எடுத்து போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து கோவை நோக்கி சென்ற தண்டவாளத்தில் நடந்து சென்று நஞ்சுண்டாபுரம் பகுதி அருகே வரும் போது 6 மணியளவில் கோவை நோக்கி வந்த கோட்டயம் – சென்னை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் அவர்களது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கோவை கோட்டரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க