October 10, 2020
தண்டோரா குழு
கோவையில் கல்லூரி மாணவர் கால்களில் சலங்கை அணிந்தபடி பறை,பெரிய மேளம் மற்றும் துடும்பு ,நையாண்டி ஆகிய கிராமிய தோல் இசைக் கருவிகளை தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்து சாதனை படைத்துள்ளார்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விமல்ராஜ்.தந்தையை இழந்தவரான இவர், கல்லூரியில் படித்து கொண்டே பீளமேடு பகுதியில் கிராமிய புதல்வன் கலை குழுவில் சேர்ந்து கிராமிய இசை கருவிகளை வாசிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் குழுவை சேர்ந்த டாக்டர் கலையரசனின் பயிற்சியில், மாணவன் விமல்ராஜ் தனது உலக சாதனை முயற்சியாக,கால்களில் சலங்கை அணிந்தபடி கிராமிய தோல் இசை கருவிகளான, பறை , பெரிய மேளம், துடும்பு மற்றும் நையாண்டி என ஐந்து இசைகருவிகளை தொடர்ந்து ஐந்து மணி நேரம் வாசித்தபடி சாதனை புரிந்துள்ளார்.
இவரது இந்த சாதனை நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.சலங்கை ஒலியுடன் தோல் இசைக் கருவிகளை தொடர்ந்து ஐந்து மணி நேரம் இசைத்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.