July 20, 2020
தண்டோரா குழு
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு பிடித்த கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில்,அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.இதைத்தொடர்ந்து கோவை அரசு கலைக் கல்லூரி வளாகம் முன்பு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணையதள முகவரி வெளியிடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து மாணவ மாணவிகள் தங்களுடைய மொபைல் போன் மூலம் இணையதள முகவரியை குறித்துக்கொண்டு இருக்கிறார்கள்.