• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்யான் ஜுவல்லர்ஸ் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 16 பேர் கைது

January 23, 2019 தண்டோரா குழு

கோவையில் கல்யான் ஜுவல்லர்ஸ் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை 2488 கிராம் தங்கம், 63 கிராம் வெள்ளி மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்படும் கல்யாண் ஜுவல்லர்ஸ் கடையில் பணியிலிருந்து நீக்கப்பட்ட கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரெனூப், கணக்கில் வராத நகைகள், பணம் தமிழக-கேரள எல்லையில் கடத்தப்படுவதாக ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோசிடம் சொல்லவே, சிறையில் செம்மரக்கடத்தலில் கைதானவர்கள் மூலம் கொள்ளை அடிக்க பைரோஸ் திட்டமிட்டுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 7 ஆம் தேதி கேரள மாநிலம் திருச்சூர் கல்யாண் ஜுவல்லர்ஸ் தொழிற்சாலையிலிருந்து கோவை 100அடி சாலையில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் கடைக்கு தமிழக-கேரள எல்லையான கோவை க.க.சாவடி அருகே கொண்டு வரப்பட்ட 3107 கிராம் தங்க நகைகள், 251கிராம் வைர நகைகள் மற்றும் 243 கிராம் வெள்ளி நகைகள் என ரூ.1 கோடிக்கும் மேலான மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகைகள் பட்டப்பகலில் கொள்ளை அடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரெனூப் மற்றும் கண்ணன், எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஹபீப், பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த விபின் சங்கீத், இடுக்கியை சேர்ந்த ரின்சாத் சிதிக் ஆகிய 5 பேரும், கொள்ளையில் ஈடுபட்ட வேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ், தமிழ்செல்வன், பைரோஸ், அத்திக் பாஷா, ராஜசேகரன், ரிஸ்வான் செரிப் மற்றும் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களை மறைத்து வைத்ததற்கு உதவியதாக பெங்களூரை சேர்ந்த மெகபூபாஷா, சாதிக்உசேன், சையது நயீம், அப்துல் ரஹீம் மற்றும் கொள்ளையில் மூளையாகவும், முக்கிய குற்றவாளியான ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ் ஆகிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 16 பேரும் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க கோவை 7வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் படிக்க