• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கருணை கொலை செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 31, 2018 தண்டோரா குழு

கந்தசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ அருண்குமார் மற்றும் திமுக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அபகரித்து விட்டதாகவும், எனவே சொத்தை மீட்டு தர வேண்டும் இல்லையெனில் கருணை கொலை செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான இடம் கோவையில் உள்ள அரசூர் பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய மார்க்கெட் மதிப்பு 5 கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியின் திமுக முன்னாள் எம்எல்ஏ அருண் குமார் மற்றும் திமுக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோர் சேர்ந்து பத்திரத்தை போலியாக பதிவுசெய்து விற்பனை விட்டதாகவும் மேலும் பல்வேறு வகையில் போராடி தனது பூர்வீக சொத்தை மீட்க முடியவில்லை என்பதால் தன்னை கருணை கொலை செய்யும் படி கந்தசாமி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார்.

காவல் துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். உடனடியாக தனது சொத்தை மீட்டு தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்

மேலும் படிக்க