• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கன்றுக்குட்டிகளை கடித்து கொன்ற சிறுத்தை – கிராம மக்கள் அதிர்ச்சி

December 29, 2018 தண்டோரா குழு

கோவை அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்,விவசாய நிலத்தில் மேய்ச்சலில் இருந்த கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட ஆலாந்துறை, மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அண்மை காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மங்கலப்பாளையம் பகுதியில் தொடர்ச்சியாக ஆடுகளை கொன்று வந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து தெங்குமரஹாடா வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மங்கலப்பாளையம் அடுத்த பெருமாள்கோவில்பதியில் ரங்கசாமி என்பவரது மாடுகள் மலை அடிவார பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை 6 மணி அளவில் மாடுகளை ரங்கசாமியின் மனைவி மருதம்மாள் கவனித்துக்கொண்டு இருந்தபோது மாடுகள் சிதறி ஓடுவதை கண்டு அங்கு போய் பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை கடித்துக்கொண்டிருந்தது. இதனையடுத்து அவர் கூச்சலிட்டார் தோட்டத்தில் இருந்தவர்கள் வந்து பட்டாசு வெடித்து சிறுத்தையை விரட்ட முயன்றனர். எனினும் அந்த சிறுத்தை மற்றொரு கன்றுக்குட்டியையும் கடித்தது. தொடர்ச்சியாக பட்டாசு வெடித்து சத்தம் எழுப்பியதால் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. தொடர்ந்து அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு கன்றுக்குட்டி இறந்த நிலையிலும்,மற்றொரு கன்றுக்குட்டி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. உடனடியாக அதனை மீட்டு கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் கன்றுக்குட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பினர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில்,

தங்கள் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அதிகளவில் கால்நடைகளை கொன்று வந்தது.இதனையடுத்து கடந்த மாதம் கூண்டு வைத்ததில் 3 வயதுள்ள ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. அதனை தெங்குமரஹாடா வனப்பகுதியில் விட்டனர். இதனையடுத்து நிம்மதியடைந்தோம், அந்த நிம்மதி ஒரு மாதம் கூட நீடிக்கவில்லை மீண்டு சிறுத்தை கால்நடைகளை தாக்க துவஙகியுள்ளதால் இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க