• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கத்தி, அரிவாளுடன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டிய இருவர் கைது

August 31, 2019 தண்டோரா குழு

கோவையில் கத்தி, அரிவாளுடன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டியவர்களில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் போலீசார் இதுபோன்ற பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படங்களை வெளியிடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், கோவையில் முதல்முறையாக ஒரு ரவுடி கும்பல் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சிலர் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். கத்தி, அரிவாளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு அவர்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவின. இதையடுத்து, அந்தப் புகைப்படங்களை வைத்து, அதில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது,புகைப்படத்தில் உள்ளவர்களில் 2 பேர் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது கோவை மாநகர காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து ஆயுதங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய சிவானந்தபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (27), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் (40) ஆகியோரை சரவணம்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும் 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க