• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 கஞ்சா வியாபாரிகள் கைது

February 1, 2021 தண்டோரா குழு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாமநாயக்கன்பாளையம் அறிவொளி நகர் பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கை நிறுத்த முயன்றனர்.அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களும் பைக்கை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர்.தொடர்ந்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.இதில் அவர்கள் மூன்று பேரிடம் கத்தி இருந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பாண்டி (23) அருப்புக் கோட்டையைச் சேர்ந்த ராஜ்குமார் (24) கோவை சாய்பாபா காலனி சேர்ந்த கமலேஷ் (22) என்பதும் இவர்கள் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் இருந்த 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைதானவர்களின் கூட்டாளிகளான ராஜேஷ், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க