• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கணவரை பிரிந்து வாழ்ந்துவந்த இளம்பெண் மீது ஆசிட் வீச்சு மர்ம நபருக்கு போலீசார் வலை

January 7, 2022 தண்டோரா குழு

கோவையில் கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரியை சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா (34) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ராதா தனது கணவரை பிரிந்து 8 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்தார்.

பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய ராதா அந்தப் பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்க சென்று பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த யாரோ மர்ம நபர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசி தாக்கிவிட்டு அங்கு இருந்து தப்பி சென்றார்.

இதில் ராதாவின் இடது பக்க முகம் தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டதும் இதனை பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் மீது ஆசிட்டை வீசி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

மேலும் படிக்க