• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சம் வரை அபராதம்

December 15, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சியில் 21 பேரும், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேர் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்கோவை மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் 800 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது காய்ச்சல் அதிகரித்து வருவதால் கூடுதலாக 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள்.அப்போது அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தால், அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொசுப்புழுக்களை அழிக்க அபேட் எனும் மருந்தை ஊற்றுகின்றனர்.

வீடுகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஊரக பகுதிகளில் ஊராட்சிக்கு 2 பேர் வீதமும், பேரூராட்சி பகுதியில் 10 பேர் வீதமும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க