July 13, 2020
தண்டோரா குழு
கோவையில் கடந்த ஒரு வாரத்தில் 10 காவலர்களுக்கு கொரோனா தொற்று
உறுதியாகியுள்ளது.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மொத்த பாதிப்பு 1261 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில்,நேற்று துடியலூரை சேர்ந்த 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து மற்ற காவலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று மேலும் 2 காவலர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு போத்தனூர் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து போத்தனூர் காவல் நிலையம் தற்காலிமாக அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் மற்ற காவலர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இன்று ஒரு காவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதைபோல் சூலூரிலும் ஒரு காவலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவையில் கடந்த ஒரு வாரத்தில் துடியலூர் காவல் நிலையத்தில் 7 பேருக்கும், போத்தனூரில் 2 பேருக்கும், சூலூரில் ஒருவருக்கும் என 10 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.