October 8, 2020
தண்டோரா குழு
கோவை செல்வபுரம் சொக்கம்புதூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சாதாரண உடையில் அங்கு சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைக்கபட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வாலிபரிடம் மேற்கொண்டதில் அவர் போத்தனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோன்று வடவள்ளி போலீசார் வீரகேரளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்கு கஞ்சா வைக்கபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரின் விசாரனையில் அந்த நபர் பீடம்பள்ளியை சேர்ந்த கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர்.