September 18, 2020
தண்டோரா குழு
கோவை இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓமினி வேனை திருடிய நபரை ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுநர்கள் மடக்கி பிடித்தனர்.
கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ மற்றும் டாக்ஸி ஸ்டாண்டு இயங்கி வருகிறது. அங்கிருந்து பயணிகளை தேவைப்படும் இடங்களுக்கு கார் மற்றும் ஆட்டோகள் பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை இரயில் நிலைய வளாகத்தில் ஓட்டுநர்கள் ஒன்றாக அமர்ந்து உரையாடி கொண்டிருந்த போது அங்கு நிறுத்தி வைக்கப்படிருந்த செல்லப்பா என்பவரின் ஆமினி(TN38BY3938) வேனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எடுத்து சென்றதை கண்டு அருகில் இருந்த நண்பரின் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கர வாகனத்தில் துரத்தி உள்ளார்.
துரத்தி வருகையில் காரை தடுத்த நிறுத்த கோரி சத்தமிட்டபடியே வந்தனர்.இவர்களது சத்தத்தை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த காவலர்கள் ஆமினி வேனை தடுத்தி நிறுத்தி அதை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது காரை திருடி வந்த நபர் அன்னூர் பகுதியை சேர்ந்த இசக்கி என்பதும் வேலை இல்லாத காரணத்தாலும் வருமையின் காரணமாக காரை திருடியதாக கூறினார். இதனை தொடர்ந்து காரின் உரிமையாளர் மற்றும் இசக்கியை போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். காரை திருடி வந்த நபரை மடக்கி பிடித்த காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான இரயில் நிலைத்தில் நான்கு சக்கர வாகனத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.