• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓட்டலில் சாப்பிட்டோரை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ. – மனித உரிமை ஆணையம் விசாரணை

April 12, 2021 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் நேற்று இரவு 10.20 மணியளவில், உணவு சாப்பிட்டு கொண்டிருந்த பெண் உட்பட பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து என்பவர் கடுமையாக தாக்கினார்.

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார். மேலும், சம்பவம் தொடர்பாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கோவையில் உணவகத்திற்குள் புகுந்து பெண்கள் உள்ளிட்டோரை காவல் உதவி ஆய்வாளர் கடுமையாக தாக்கிய சம்பவத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குல் நடத்திய சம்பவம் பற்றி மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க