May 3, 2020
தண்டோரா குழு
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் அருகே உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கேரளா செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதிகேட்டிருந்தனர்.இதையடுத்து,
அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து 4 பேரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனை முடிவில் நால்வரில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த மூன்று பேரும் இ.எஸ்.ஐமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இவர்களது தொடர்புகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, மேலும் தனிமைப்படுத்துவதை தீவிரப்படுத்தும் வகையில்இவர்களின் செல்போனின் நெட்வொர்க் அலைவரிசைகளை ஆய்வு செய்து தரக்கோரி காவல்துறையினரிடம் சுகாதாரத்துறை கேட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.