• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரே இடத்தில் 14 பேருக்கு கொரானா தொற்று – மேலும் 30 பேரை தேடிவரும் சுகாதார ஊழியர்கள்

July 16, 2020 தண்டோரா குழு

கோவையில் ஒரே இடத்தில் 14 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்ட நிலையில் மேலும் 30 பேரை சுகாதார ஊழியர்கள் தேடிவருவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையில் கோவிட்-19 தொற்று வேகமாக பரவிவருகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம், மேலும் முககவசம் அணிவதையும், கைகளை சோப்புகொண்டு நன்றாக அடிக்கடி கழுகுவதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.சில தினங்களுக்கு முன் கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரானா தொற்று உறுதி செய்ததை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், கோவை கரும்புக்கடை இலாஹி நகர் பகுதியை சேர்ந்த 14 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், மேலும் 30 பேரை சுகாதார ஊழியர்கள் தேடிவருகிறார்கள். இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அப்பகுதி முழுவதும். நோய் தடுப்பு மருந்துகள் தெளித்து வருகிறார்கள். மேலும் கோவை போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் மகேஸ்வரன். அந்த பகுதியில் மக்களிடையே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பொதுமக்கள் வெளியே சொல்லும்போது கவனமுடன் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் படிக்க