• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஒரு லட்சம் மதிப்புடைய சந்தன மரம் வெட்டி கடத்தல்

November 8, 2019 தண்டோரா குழு

கோவையில் ஒரு லட்சம் மதிப்புடைய சந்தன மரம் வெட்டி கடத்தப்பபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்த நொடி மலைப்பகுதியில் போலம்பட்டி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த போளுவாம்பட்டி வனச்சரகத்தில் ஏராளமான சந்தன மரங்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் உள்ளன. இந்த சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பூலம்பட்டி வனத்துறையினர் தாண்டி மலை கிராமம் அருகே வனப்பகுதியில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனப்பகுதியில் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் வேரோடு வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு சிதறிக்கிடந்த கட்டைகளை சேகரித்த வனத்துறையினர் போளுவாம்பட்டி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். வெள்ளிங்கிரி மலை மற்றும் ஈஷா யோக மையம் அமைந்துள்ள இந்த பகுதியில் ஏராளமான மக்கள் நடமாட்டம் எப்போதும் காணப்படும் நிலையில் வனத்துறையின் சோதனைச் சாவடியை தாண்டி சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெட்டப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு ஒரு லட்சம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் சந்தன மரம் வெட்டி அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க