June 13, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால், கோவை மாநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், கனமழையும், பல இடங்களில் மிதமான மழையும் நிலவிவருகின்றது.
கேரளா மாநிலத்தில், தென்மேற்கு பருவமழையானது. கடந்த 1-ந் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தில் போதிய மழை பெய்யாமல் இருந்தாலும்,கோவை மாநகரில் நேற்று முதல் பலத்த மழை பெய்ய தொடங்கி உள்ளது.மேலும், கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், வடகோவை, வடவள்ளி, பூ மார்க்கெட், இரயில்வே நிலையம், காந்திபுரம், போன்ற பகுதிகளில், மிதமான மழை பெய்து வருகின்றது. காலை முதலே, லேசான மழை தூறலாக பெய்து வந்த நிலையில், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.
தொடர்ச்சியாக பல இடங்களில் கன மழை பெய்தது இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு வானிலை ஆய்வு மையம் சார்பில் 190மில்லி மீட்டர் அளவுக்கும் மேலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.இதனால் தொண்டாமுத்தூர் பகுதிகளில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.