August 8, 2020
தண்டோரா குழு
கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த டவுசர் கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் முகத்தை மூடிக்கொண்டு டவுசருடன் கும்பலுடன் கொள்ளையர்கள் சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.இதற்கிடையில்,நேற்று சிங்காநல்லூரில் இவர்கள் கொள்ளையடிக்க முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அதில் ஒரு கொள்ளையனின் முகம் தெளிவாக கேமராவில் பதிவானது.
இதையடுத்து,இது குறித்து தனிபடை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இன்று சிங்காநல்லூர் போலிசார் டவுசர் கொள்ளையர்களில் வீரமணி என்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.தற்போது அவனிடம் போலீசார்தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.