• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஏ டி எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

May 3, 2019 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் அங்கப்பா பள்ளி அருகே உள்ள கரூர் வைசியா வங்கி ஏடிஎம் இயந்திரத்தை முகமூடி அணியாமல் ஆட்டோ ஓட்டுநர் உடையில் வந்த 3 பேர் நள்ளிரவில் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த இடையார்பாளையம் செல்லும் வழியில் உள்ள அங்கப்பா பள்ளி அருகே கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் உள்ளது. இங்கு இன்று நள்ளிரவில் சுமார் 12.00 மணி அளவில் ஏடிஎம் ல் பணம் எடுப்பதுபோல் ஆட்டோ ஓட்டுநர் உடையில் வந்த 3 பேர் எந்த வித முகமூடியும் அணியாமல் உள்ளே நுழைந்தனர். அதில் 2 பேர் வெளியே காவலுக்கு நின்று கொள்ள ஒருவன் திடீர் என தன் கையில் வைத்திருந்த பைப்பை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தான். உள்ளே பணம் இருக்கும் பெட்டகத்தை உடைத்த போது எச்சரிக்கை அலாரம் ஒலித்தது இதையடுத்து அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடினர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய பைப்பை அங்கேவிட்டுச் சென்றுவிட்டான் மீண்டும் சிறிது நேரத்தில் வந்து அதை எடுத்துச் சென்றான். சிறிது நேரத்தில் எச்சரிக்கை அலாரம் சத்தம் நின்றவுடன் உள்ளே நுழைந்த கொள்ளையன் மீண்டும் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முயற்சி செய்தான் நீண்ட நேரம் போராடியும் பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாமல் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் கரூர் வைசியா வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர். கொள்ளைமுயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருந்தது. இதை வைத்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொல்ளையில் ஈடுபட்டது இடையார்பாளையம் ரஹீம் நகரைச் சேர்ந்த பாலாஜி மற்றும் கவுண்டம்பாளையம் மீனாட்சி நகரைச் சேர்ந்த புவனேஷ்வரன், ரங்கராஜ் என்பதும் இவர்கள் பள்ளி அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். இவர்கள் நேற்று இரவு பள்ளிக்கு எதிரே உள்ள மைதானத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் அங்கிருந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க