• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் எல்ஐசி ஹவுசிங் வழங்கும் “உங்கள் இல்லம் 2021 வீட்டுக்கடன் கண்காட்சி

November 27, 2021

கோவையில் எல்ஐசி ஹவுசிங் வழங்கும் “உங்கள் இல்லம் 2021 வீட்டுக்கடன் கண்காட்சி” இரு தினங்கள் நடக்கிறது.

எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் மற்றும் விஜி விளம்பர நிறுவனம் ஆகியவை இணைந்து உங்கள் இல்லம் 2021 வீடு மற்றும் வீட்டு கடன் கண்காட்சியினை ஒன்பதாவது முறையாக கோவை சுகுணா மண்டபத்தில் நடத்தி வருகிறது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸின் தெற்கு மண்டல மேலாளர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக கடன் வழங்கும் குழு செயல்படுகிறது இங்கு வீட்டுக்கடன் சிறப்பு வட்டி உயரத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் வீடுகட்ட வீட்டில் மாறுதல்கள் செய்ய மற்றும் அடமான கடன் ஆகியவை குறைந்த வட்டி விகிதத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளதாக எல்ஐசி பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இக்கண்காட்சியில் 40க்கும் மேற்பட்ட முன்னணி கட்டிட நிறுவனங்கள் தனித்தனியாக அரங்கங்கள் அதோடு வீடுகளை உடனடியாக முன்பதிவு செய்பவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் ரொக்க தள்ளுபடி உள்ளிட்ட உடனடி பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் கலந்துகொண்டு எளிதான முறையில் கடன் பெறலாம் என தெற்கு மண்டல மேலாளர் கோவிந்தராஜன் தெரிவித்தார்

மேலும் படிக்க