• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபம் திறப்பு

February 6, 2019 தண்டோரா குழு

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

விவசாயிகளின் நலனுக்காகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு அவர்களுக்குப் பல்வேறு சலுகைகளைப் பெற்றுத் தந்தவர் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு. கோவையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவரது நினைவிடம் உள்ள அன்னூர் வட்டம், வையம்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இதில் செய்தி,மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலை வகித்தார்.விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணிமண்டபத்தைத் திறந்துவைத்து பின்னர் அவரது சமாதிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து அவரது திருவுருவசிலையை திறந்து வைத்து மாலையிட்டு மரியாதை செய்த பின்னர் விழா மேடையில் பேசிய அவர், இதில் நாடாளுமன்ற,மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், நாராயணசாமி நாயுடுவின் குடும்பத்தினர், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், பல்வேறு பயனாளிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் படிக்க