• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணி துவக்கம்

April 5, 2021 தண்டோரா குழு

கோவையில் உள்ள 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணிகள் இன்று துவங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும், கணினி முறையில் சுழற்சி அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பணிகள் துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுகின்றன.இதற்கான பணிகள் இன்று காலை துவங்கியுள்ளது.பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எழுது பொருட்கள், மை,தேர்தலுக்கு தேவையான படிவங்கள் என அனைத்து உபகரணங்களும் இன்று இரவுக்குள் அனுப்பப்படுகின்றன.

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் 21 ஆயிரத்து 500 அரசுப்பணியாளர்களும் இன்று இரவே வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டு காலையில் பணியில் ஈடுபட உள்ளனர். காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க