• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக வன நாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம்

March 21, 2018 தண்டோரா குழு

கோவை வனத்துறை சார்பாக உலக வன நாளை முன்னிட்டு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள தமிழ்நாடு் வன உயர் பயிற்சியகத்தில் உலக வன நாளை முன்னிட்டு,வனக்கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் இந்திய வனமரபியல்  நிறுவன இயக்குனர் மோகித் கெரா, மற்றும் வனத்துறை அதிகாரிகள், வன ஆர்வலர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

இதில் பேசிய, மோகிய் கெரா,

நாட்டில் நிலவும் காலநிலை மாறத்திற்கு காடுகளே காரணம் எனவும்,வளமான நகரங்களுக்கு வனங்களே ஆதரம் எனவும் தெரிவித்தார்.உலகில் உள்ள 75% நீர் ஆதாரத்திற்கு காடுகளே காரணம் எனவும் தெரிவித்தார்.ஒரு மரம்,ஓர் ஆண்டிற்கு 13 முதல் 14 கிலோ மாசை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது, எனவே்  தூய்மையான நகரம் உருவாக்க, நகரங்களில் 40% சதவிகிதம் மரங்கள் இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும்,இந்நிகழ்ச்சியில் வேட்டை தடுப்பு காவலர்களுக்க பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க