• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்று பெண்கள் உடல் தானம்

March 7, 2019 தண்டோரா குழு

கோவையில் உலக மகளிர்தினத்தை முன்னிட்டு கேரள மற்றும் கோவையை சேர்ந்த பெண்கள் மூவர் உடல் தானம் செய்தனர்.

கோவையில் உலக மகளீர் தினத்தை முன்னிட்டு கோவை குனியமூத்தூர் இடையர்பாளைம் பகுதியை அமுதா ரவிக்குமார், மாதம்பட்டியை சேர்ந்த சாந்தா மற்றும் கேரள மாநிலம் கஞ்சிகோடு பகுதியை சேர்ந்த கலைச்செல்வி ஆகிய மூவரும் உடல் தானம் செய்தனர். கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு உடல் தானம் செய்வது குறித்த பத்திரப்பதிவு சான்றிதழை கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அசோகனிடம் வழங்கினர்.

பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே உடல் தானம் செய்யும் நிலையில், உயிரை பிரியும் உடல் வீணாக மண்ணில் மக்கிப்போவதற்கு பதிலாக இறந்தும் உபயோகமாக இருக்கும் வகையில் பெண்களும் உடல் தானம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சியில் ஈடுபட்டதாக உடல் தானம் செய்த பெண்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க