• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி

June 20, 2020 தண்டோரா குழு

இந்திய சீன எல்லையில் சீன ராணுவம் நடத்திய அத்துமீறிய தாக்குதலால் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் சார்பில் கோவையில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி மூலம் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் மற்றும் கல்வான் பகுதியில் இருநாட்டு ராணுவத்தினரிடையே நடைபெற்ற மோதலில் இந்தியாவை சார்ந்த 20 இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சீன ராணுவத்தை கண்டித்தும், இந்திய வீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை பல்வேறு அமைப்புகள் நாடு முழுவதும் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. நிறுவனர் தலைவர் அன்புமாரி ஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்டியிட்டு ராணுவ வீரர்களுக்கு தங்கள் மரியாதையை சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தினர் செலுத்தினர்.

மேலும் சீன ராணுவத்துக்கு எதிராக இந்திய ராணுவத்தினரின் வீரத்தை பறைசாற்றும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பினர். நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட அமைப்பாளர் முத்துராஜ் தலைமையில்,கோவை மாவட்ட பொதுச் செயலாளர் புல்லட் சேகர் ஜி, கோவை மாவட்ட தலைவர் காளிதாஸ், கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ் ,மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் மாவட்ட அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க